உலகின் எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாத அணுஆயுத ஏவுகணை: - அறிமுகம் செய்த புதின்

உலகின் எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாத அணுஆயுத ஏவுகணையை தங்களது ராணுவத்தில் சேர்த்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையின் நாடாளுமன்றத்தில் இரு சபையின் உறுப்பினர்கள் மத்தியில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கில் புதின் உரையாற்றினார். அப்போது தனது ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார முன்னேற்றங்களை பட்டியலிட்டு பேசினார்.
கடந்த 2017-ம் ஆண்டு ரஷ்யா ராணுவத்தில் 300 புதிய வகை ஆயுதங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ரஷ்யாவின் ராணுவ பலத்தை அதிகரிப்பது, எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்கு அல்ல என்று அவர் குறிப்பிட்டார். பின்னர் புதிய ஏவுகணை அமைப்புகளை பிரம்மாண்ட திரைகளில் திரையிட்டு அவற்றின் செயல்பாடுகளை விளக்கினார். வழக்கமாக ஏவுகணைகள் ஏவுமிடத்திலிருந்து புறப்பட்டு பாய்ந்து செல்லும்போது அவற்றின் பாதையை கணித்து தடுக்கலாம், ஆனால் இந்த ஏவுகணைகள் எதிர்பாராத திருப்பங்களுடன் தடைகளை தாண்டி சென்று தாக்கும் வல்லமை படைத்தவையாகும்.
இந்த ஏவுகணைகளால் ரஷ்ய எல்லைகளில் நேட்டோ கூட்டுப்படைகள் ஏற்படுத்தியுள்ள தடுப்பு ஏற்பாடுகள் பயனில்லாமல் போய்விடும் என்று புதின் கூறினார். வருகிற 18-ம் தேதி ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் புதின் மீண்டும் போட்டியிடுகிறார். சுயேட்சையாக போட்டியிடும் அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் மற்றும் எல்.டி.பி.ஆர். கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாகிஸ்தானில் தலித் இந்து பெண்ணுக்கு எம்.பி.பதவி!

பொண்டாட்டியிடம் திட்டு வாங்கமல் இருக்க அமெரிக்கர் செய்யும் காரியத்தைப் பாருங்கள்