குருத்தணுக்களை தானம் அளித்த இளையர்: ரத்தப் புற்றுநோயை வென்றெடுத்த பெண்மணி


நோய் தீவிர மடைந்த நிலையில் உயிருக்குப் போராடிய பெண்ணுக்கு தனது குருத்தணுக்களைத் தானமாக அளித்து அவரது உயிரைக் காப் பாற்றியுள்ளார் இளையர் ஒருவர். டெல்லியைச் சேர்ந்த 37 வயதான கரிமா சரஸ்வத், தனியார் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். ஆறு வயதுக் குழந்தைக்குத் தாயான அவர், அலுவலகம், வீடு எனப் பரபரப்பாக இயங்கி வந்த நிலை யில், 2016ஆம் ஆண்டு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் கரிமா. பரிசோதனையில் அவருக்கு ரத்தப் புற்றுநோய் தாக்கி இருப்பது தெரியவந்தது. மேலும் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பதாக மருத்துவர் கள் தெரிவித்தபோது, கரிமாவின் குடும்பத்தார் கடும் அதிர்ச்சிக்கும் பரிதவிப்புக்கும் ஆளாகினர். இந்நிலையில், கரிமாவின் உட லுடன் ஒத்துப்போகும் குறிப்பிட்ட வகையிலான குருத்தணுக்கள் கிடைத்தால் அவரது உயிரைக் காப்பாற்ற வாய்ப்புள்ளதாக மருத் துவர்கள் நம்பிக்கை அளித்தனர்.

இதையடுத்து குருத்தணுக் களைப் பெற கரிமாவின் வீட்டார் முயற்சி மேற்கொண்டனர். அதன் பலனாக தாத்ரி என்ற உடல் உறுப்பு தான அமைப்பின் மூலம் 27 வயதான குருமூர்த்தி என்ப வரின் குருத்தணுக்கள் கரிமா வுக்கு ஒத்துப்போகும் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர் தானமாக அளித்த குருத்தணுக்கள் கரிமா வின் உடலுக்குள் செலுத்தப்பட்டன. இதன் மூலம் ரத்தப் புற்றுநோயை வென்றெடுத்து உயிர் பிழைத்துள் ளார் கரிமா. நேற்று முன்தினம் கோவையில் வாகனங்களைப் பழுதுபார்க்கும் மெக்கானிக்காகப் பணியாற்றி வரும் குருமூர்த்தியைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். தன் மூன்று வயது தங்கை புற்றுநோயால் பலி யானதை அடுத்து குருத்தணுக் களைத் தானம் செய்ய தன் பெயரைப் பதிவு செய்திருந்ததாக குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Posted in Singapore tamil murasu

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாத அணுஆயுத ஏவுகணை: - அறிமுகம் செய்த புதின்

பாகிஸ்தானில் தலித் இந்து பெண்ணுக்கு எம்.பி.பதவி!

பொண்டாட்டியிடம் திட்டு வாங்கமல் இருக்க அமெரிக்கர் செய்யும் காரியத்தைப் பாருங்கள்