உலகின் மிக இருட்டான கட்டிடம்!


உலகின் மிக இருட்டான கட்டிடம் தென் கொரியாவில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சார்பில் லண்டன் கட்டிடக்கலை நிபுணர்களைக் கொண்டு இந்த வித்யாசமான கட்டிடத்தை வடிவமைத்துள்ளனர். தூய்மை மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை குறிக்கும் வகையில் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 
தனித்துவமான அம்சத்தை கொண்டுள்ள இந்த கட்டிடம் 99% சூரிய ஒளியை உறிஞ்சும் தன்மையை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் மில்லியன் கணக்கான கார்பன் நானோகுழாய்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் தலைமுடியை விட சுமார் 3,500 மடங்கு மெல்லியதாக உள்ள சிறிய நானோகுழாய்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கட்டிடத்தின் சிறப்பம்சமாகும். இந்த நானோகுழாய்கள் 14 மற்றும் 50 மைக்ரான் நீளத்தை கொண்டதாகும். அதாவது ஒரு மைக்ரான் 0.001 மில்லி மீட்டர் ஆகும்.

சூரிய ஒளி நானோகுழாய்களில் பிடிக்கப்பட்டு கட்டிடத்தில் இருந்து வெப்பமாக வெளியிடப்படுகிறது. VantaBlack VBx2 என்றழைக்கப்படும் ஒரு புதிய மற்றும் தனித்துவமான பொருளை கொண்டு இந்தக் கட்டிடம் முழுவதுமாக மூடப்பட்டிருக்கிறது. இந்த தனித்துவமான பொருள் அதன் மேற்பரப்பில் பாயும் ஒளியை சுமார் 99 சதவிகித அளவுக்கு உறிஞ்சும் திறன் கொண்டது. இந்த (VantaBlack VBx2) பொருள் தான் பிரபஞ்சத்தின் மிக கருப்பான பொருள் என்றும் இதன் அருகில் சென்றால் நாமே மறைந்து விடுவோம் எனவும் இதன் உரிமத்தை வாங்கியுள்ள அனீஸ் கபூர் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டிடம் தான் தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தற்காலிக பெவிலியனாக உள்ளது. மேலும் இந்த கட்டிடத்தில் சிறிது சிறிதாக ஆயிரக்கணக்கில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை பார்த்தல் பூமியிலிருந்து வானில் நட்சத்திரங்களை பார்ப்பதை போல் தெரியுமாம், மேலும் விண்வெளியில் மிதப்பதை போன்ற உணர்வையும் ஏற்படுத்தும் என இந்த கட்டிடத்தின் வடிவமைப்பாளர் அனீஸ் கபூர் கூறியுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாத அணுஆயுத ஏவுகணை: - அறிமுகம் செய்த புதின்

பாகிஸ்தானில் தலித் இந்து பெண்ணுக்கு எம்.பி.பதவி!

பொண்டாட்டியிடம் திட்டு வாங்கமல் இருக்க அமெரிக்கர் செய்யும் காரியத்தைப் பாருங்கள்