கென்யாவில் 39 பெண்களை மணந்து 103 குழந்தைகளுக்கு தந்தையான நபர்!


கென்யாவில் வாழும் நபர் ஒருவர் 39 பெண்களை திருமணம் செய்து கொண்டு 103 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்டோலியா கிராமத்தை சேர்ந்தவர் நபி யோகனா (68), தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என நபி கூறி கொள்கிறார். இவர் இதுவரை 39 பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் 103 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளார்.
இதோடு யோகனாவுக்கு 232 பேர குழந்தைகளும் உள்ளனர், இவரின் மூன்று மனைவிகள் உயிரிழந்து விட்டனர். சிறுவயதிலிருந்து மாமிசம் சாப்பிடாத இவர் ஒருமுறை கூட முகத்தை ஷேவ் செய்து கொண்டதில்லை. யோகனா கூறுகையில், நான் என் வருங்கால மனைவிகளை தேடி செல்வதில்லை, கடவுள் தான் என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார்.
கடவுளின் சொல்படி நான் 48 பெண்களை மொத்தம் திருமணம் செய்து கொள்ளவேண்டும், அதை செய்வேன் என கூறியுள்ளார். தான் 280 ஆண்டுகள் வாழ்வேன் என கூறும் யோகனா அதன் பின்னர் இறந்து மீண்டும் மறுபிறவி எடுத்து அடுத்த 2700 ஆண்டுகளுக்கு வாழ்வேன் என கூறுகிறார்!
Posted in seithy.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாத அணுஆயுத ஏவுகணை: - அறிமுகம் செய்த புதின்

பாகிஸ்தானில் தலித் இந்து பெண்ணுக்கு எம்.பி.பதவி!

பொண்டாட்டியிடம் திட்டு வாங்கமல் இருக்க அமெரிக்கர் செய்யும் காரியத்தைப் பாருங்கள்