சவுதி அரேபியாவில் ராணுவத்தில் பெண்களை சேர்க்க சவுதி அரசு முடிவு!
சவுதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒருபகுதியாக ராணுவத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராணுவத்தில் பெண்கள் பணிபுரிவது கட்டாயமக்கப்படவில்லை என்றும் விருப்பமுள்ளவர்கள் மட்டுமே ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் எனவும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
|
சவுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் சவுதி அரேபியா மன்னர் சல்மான் ஆணை பிறப்பித்தார். 2018 ஜூன் மாதத்துக்குள் இது அமல்படுத்தப்படும் என்றும் அறி்விக்கப்பட்டது. அண்மையில் பெண்கள் கால்பந்து போட்டிகளை பார்க்க விளையாட்டு அரங்குகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்குவதாகவும் சவுதி அரேபிய அரசு அறிவித்தது.
இது ஒரு முக்கியமான அறிவிப்பு என்று கூறிய சவுதி கலாச்சார அமைச்சர் அவாத் அலாவத், 'திரையரங்குகளைத் திறப்பது பொருளாதார வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் வழிவகுக்கும் என்றும் விரிவான கலாச்சார துறையை மேம்படுத்துவதன் மூலம் புதிய வேலை மற்றும் பயிற்சி வாய்ப்புக்களை உருவாக்க வழிவகுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Posted in seithu.com
|

கருத்துகள்
கருத்துரையிடுக