இறந்த மம்மியை மம்மியாக்கி வாழ்ந்து வந்த பாட்டி
|
உக்ரைனில் மூதாட்டி ஒருவர் இறந்த தன் தாயுடன் 30 ஆண்டுகள் வாழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உக்ரைனின் மைகோலைவ் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிசார் புகார் அளித்துள்ளனர்.அதன் பின் பொலிசார் அந்த மூதாட்டி இருக்கும் வீட்டை சோதனை செய்து பார்த்த போது, அவரின் தாயார் உடல் சோபாவில் கிடத்தப்பட்டிருந்தது.
|
வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்டு, தலை மூடப்பட்டிருந்தது. நீல நிற ஷூ, பச்சை நிற சாக்ஸ் அணிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து பொலிசார் மூதாட்டிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி அருகில் இருப்பவர்களிடம் இவர் குறித்து விசாரித்த போது யாரிடமும் அவர் பேசுவதில்லை என்று கூறியுள்ளனர்.
Posted in seithy.com
|

கருத்துகள்
கருத்துரையிடுக