விமானத்தின் ஜன்னல் வழியாக குதித்த இளைஞர்.
விமானத்தின் அவசர கால ஜன்னல் வழியாக இளைஞர் குதித்தார். தவறான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து அவர் குதித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள நெவார்க் விமான நிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் ட்ராய் பட்டூன் என்பவர் ஏறியுள்ளார். விமானத்தின் உள்ளே சென்ற பிறகு தான் அவருக்கு இது தான் செல்ல வேண்டிய விமானம் இல்லை என்று தெரிய வந்தது. உடனே தன்னை இறக்கிவிடும்படியும் விமான சிப்பந்திகளிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த விமானத்தில் இருந்த அதிகாரிகள் அவரை அமைதியாக உட்காரும்படி கூறியுள்ளனர். இதையடுத்து அந்த நபர் விமானத்தில் இருந்த அவசர கால ஜன்னலை திறந்து விமான இறக்கை மீது குதித்துள்ளார். இறக்கை மீது ஊற்றப்பட்டிருந்த சூடு நீரால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் காலதாமதமாக புறப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் விமான பயணிச்சீட்டின்படி அவர் சரியான விமானத்தில்தான் ஏறியுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
Posted in makkal kural.com

கருத்துகள்
கருத்துரையிடுக