பெரியார் பேச்சு


நம் நாட்டில் திராவிட மக்களுக்குள்ளாகவே திராவிடர், ஆதிதிராவிடர் என்கிற ஒரு பிரிவு இருக்கிறது என்பதோடு ஆதிதிராவிட சமூகம் மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட சமூகமாக இருந்து வருகிறது. திராவிடநாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்கு திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்களோ அப்படி திராவிடர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கு அதை விட மேம்பட்ட தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த நிலைமை திராவிட சமுதாயத்துக்கே மானக் கேடான நிலைமையாகும் என்பதோடு. திராவிடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்களென்று வகுத்திருப்பதையும் அரண் செய்கிறது. ஆகையால், ஆதிதிராவிடர் என்கின்ற பெயரே மாற்றப்பட்டு இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்கின்ற பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என்பது எனது ஆசை. இந்த இரு நோக்கங்களும் ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கங்களில் பட்டத்தென்பது எனது அபிப்பிராயமாதலால் கட்சியின் பேரால் இவைகளைச் சொல்லுகிறேன். உத்தியோகம், கல்வி முதலிய விஷயங்களில் ஆதிதிராவிடர்களுக்குத் தனி சலுகைக்காட்டி சீக்கிரத்தில் நம்மோடு சரி சமத்துவம் அடையும் படியான நிலைமை ஏற்படுத்த வேண்டியது நம் கட்சியின் தனிப்பட்ட கடமைகளில் ஒன்று.
(குடி அரசு -- 25/08/1940, திருவாரூர் ஜஸ்டிஸ்கட்சி மாநாட்டில் பெரியார் பேசியது)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாத அணுஆயுத ஏவுகணை: - அறிமுகம் செய்த புதின்

பாகிஸ்தானில் தலித் இந்து பெண்ணுக்கு எம்.பி.பதவி!

பொண்டாட்டியிடம் திட்டு வாங்கமல் இருக்க அமெரிக்கர் செய்யும் காரியத்தைப் பாருங்கள்