இடுகைகள்

பிப்ரவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சர்ச்சைகளின் 'நாயகன்' ஜெயேந்திர சரஸ்வதி

படம்
காஞ்சி 'சங்கரமடத்தின்' 69-வது பீடாதிபதி என அந்த மடத்தினால் குறிப்பிடப்படும் ஜெயேந்திர சரஸ்வதி புதன்கிழமை காலமானார். சமய மடாதிபதிகளின் வழக்கமான பிம்பத்துக்கு மாறாக பெரும் அரசியல் செல்வாக்கோடு விளங்கியவர் இவர். அதே நேரம் கொலை வழக்கில் கைது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் சிக்கியவர். ஜெயேந்திர சரஸ்வதியின் இயற்பெயர் (பூர்வாசிரமப் பெயர்) சுப்ரமணியன். இவரது தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியவர். ஆறு ஆண்டுகள் சங்கரமடத்தின் வேதபாட சாலையில் பயின்ற சுப்ரமணியன், 1954ல் ஜெயேந்திர சரஸ்வதி எனப் பெயர் மாற்றம் பெற்று சங்கர மடத்தின் பீடாதிபதியானார். தொடக்க காலத்தில், பெரிதாக செய்திகளில் அடிபடாத ஜெயேந்திர சரஸ்வதி, 80களிலிருந்தே மடத்தின் சமயச் செயல்பாடுகளுக்கு மாறான செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்பட்டவர். குறிப்பாக தமக்கு முந்தைய மடாதிபதியான சந்திரசேகர சரஸ்வதி இருக்கும்போதே, தமக்கு இளைய பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதியை இவர் நியமித்தார். ஜெயேந்திர சரஸ்வதி சம்பந்தப்பட்ட மிகப்பெரிய சர்ச்சை 1987ல் வெடித்தது. அந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி யாரிடமும் சொல்லாமல், மடத்தைவிட்டு வெளியேறினார் ஜெயேந்திரர். ...

குருத்தணுக்களை தானம் அளித்த இளையர்: ரத்தப் புற்றுநோயை வென்றெடுத்த பெண்மணி

படம்
நோய் தீவிர மடைந்த நிலையில் உயிருக்குப் போராடிய பெண்ணுக்கு தனது குருத்தணுக்களைத் தானமாக அளித்து அவரது உயிரைக் காப் பாற்றியுள்ளார் இளையர் ஒருவர். டெல்லியைச் சேர்ந்த 37 வயதான கரிமா சரஸ்வத், தனியார் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். ஆறு வயதுக் குழந்தைக்குத் தாயான அவர், அலுவலகம், வீடு எனப் பரபரப்பாக இயங்கி வந்த நிலை யில், 2016ஆம் ஆண்டு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் கரிமா. பரிசோதனையில் அவருக்கு ரத்தப் புற்றுநோய் தாக்கி இருப்பது தெரியவந்தது. மேலும் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பதாக மருத்துவர் கள் தெரிவித்தபோது, கரிமாவின் குடும்பத்தார் கடும் அதிர்ச்சிக்கும் பரிதவிப்புக்கும் ஆளாகினர். இந்நிலையில், கரிமாவின் உட லுடன் ஒத்துப்போகும் குறிப்பிட்ட வகையிலான குருத்தணுக்கள் கிடைத்தால் அவரது உயிரைக் காப்பாற்ற வாய்ப்புள்ளதாக மருத் துவர்கள் நம்பிக்கை அளித்தனர். இதையடுத்து குருத்தணுக் களைப் பெற கரிமாவின் வீட்டார் முயற்சி மேற்கொண்டனர். அதன் பலனாக தாத்ரி என்ற உடல் உறுப்பு தான அமைப்பின் மூலம் 27 வயதான குருமூர்த்தி என்ப...

சிரியா பிரச்னை ஒரு ஆய்வு நோக்கு!

படம்
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்ட மிகவும் கோரமான யுத்தம் நடக்கும் சிரியா மீண்டும் தலைப்பு செய்திகளில் வந்திருப்பதை பார்க்க முடிகிறது. கிழக்கு ஃகூத்தா (East Ghouta) வில் மீண்டும் சிரிய இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட Operation Damascus Steal இராணுவ நடவடிக்கை காரணமான மனித பேரவலங்கள், உலகத்தின் கவனத்தை மீண்டுமொரு முறை சிரியா பக்கம் திருப்பியிருக்கிறது. கிழக்கு ஃகூத்தாவின் அமைவிடம் கிழக்கு ஃகூத்தா என்பது சிரியா தலைநகர் டமாஸ்கசுக்கு மிக அருகில்  இருக்கும் புறநகர் பகுதியின் பெயர். இதற்குள் பத்து நகரங்கள் உள்ளடங்குகின்றன. எனினும் Douma எனப்படும் நகரமே பெரிய நகராகும். டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் கூட ஃகூத்தாவுக்கு மிக அருகிலேயே இருக்கிறது. கிழக்கு ஃகூத்தா சிரியா புரட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் கழிந்த பின்னர் போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. அன்றிலிருந்து கடந்த ஆறு வருடங்களாக சிரியா இராணுவத்தின் முற்றுகைக்குள் இருந்தாலும் தொடர்ச்சியாக போராளிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்துவருகிறது. கிழக்கு ஃகூத்தாவில் இயங்கும் போராளி ஆயுத குழுக்களும் உள்முரண்பாடுகளும். ...

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல

படம்
பிரிட்டனில் செல்லமாக வளர்த்து வந்த நாயை, பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த அமண்டா ரோட்ஜர்ஸ் என்ற 47 வயது பெண் தான் செல்லப்பிராணியாய் வளர்க்கும் ஷீபா என்ற நாயை மணந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர், பல பிரச்னைகளால் சில மாதங்களிலேயே தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த அமாண்டா, தற்போது தான் வளர்க்கும் நாய் ஷீபாவையே திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், என் காதலை ஷீபாவிடம் முட்டிப்போட்டு கூறிய போது தன் வாலாட்டி சம்மதம் தெரிவித்தது என்றும், துயரத்தில் இருக்கையில் சிரிக்க வைத்து ஆறுதல் கூறி ஒரு கணவருக்கு இருக்க வேண்டிய குணத்தை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்றாலும் தனக்கு ஷீபா தான் முக்கியம் என அமாண்டா தரப்பில் கூறப்பட்டுள்ளது. Posted in vannakamlondon

விஞ்ஞானிகள் மனிதக் கரு முட்டைகளை ஆய்வகத்தில் வளர்த்து சாதனை

பிரிட்டன்மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முதல்முறையாக மனித கருமுட்டைகளை முழு முதிர்ச்சியடைவதற்கு முந்தைய நிலை வரை ஆய்வகத்தில் வளர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கு முன் எலி முட்டைகள் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டன. அதன் பின் மனித கருமுட்டைகளை விஞ்ஞானிகள் வளர்த்துள்ளனர். இந்த கருமுட்டைகள் மூலம் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமானதாக இருக்குமா? என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாக விஞ்ஞானிகள் கூறினர். இந்த சிகிச்சை முறை வெற்றியடைந்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும். இது குறித்து பேசிய விஞ்ஞானிகள், ‘இந்த முறை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. இது எதிர்காலத்தில் மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த முறை வெற்றி பெற்றால் வருங்காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கருவை பாதுகாத்து ஆரோக்கியமான குழந்தையை பெற முடியும். மேலும் கருமுட்டை வளர்ச்சியில் பல முன்னேற்றங்கள் ஏற்படும்’ என தெரிவித்தனர். Posted in vannakam landon

2 மணிநேரத்தில் பறக்கும் அதி வேக விமானம் | பெய்ஜிங் – நியூயார்க்

படம்
மிக அதிவேகமாக பறந்து செல்லும் ‘ஹைபர் சோனிக்’ விமானத்தை சீனா தயாரித்துள்ளது. இதன் மூலம் பெய்ஜிங்கில் இருந்து நியூயார்க்குக்கு 2 மணி நேரத்தில் பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டுசேர்க்க முடியும். தற்போது பெய்ஜிங்- நியூயார்க் இடையே 13½ மணிநேரம் விமான பயணம் நடைபெறுகிறது. மிக அதிவேகமாக ‘ஹைபர் சோனிக்’ விமானம் மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. அண்மையில் இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அப்போது அது மணிக்கு 8,600 கி.மீ. வேக திறனுடன் சென்றது. இதில் பயணம் செய்பவர்க்கு விமானக் கட்டணம் உயர்வாக செலுத்த வேண்டி வரும் என கூறப்பட்டுள்ளது. Posted in vanakam Landon

கரும்பலகையில் கணினி: மாணவர்களை அசத்திய ஆசிரியர்

படம்
தென்னாப்பிரிக்காவில் ஆசிரியர் ஒருவர் கணினி இல்லாததால், microsoft word-இன் படத்தை வரைந்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார். கானா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் கணினி வசதி இல்லாததால் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பள்ளியில் ஆசிரியாராக செயல்பட்டு வரும் க்வாட்வோ ஹாட்டிஷ் என்பவர், மாணவர்களின் புரிதலுக்காக microsoft word-இன் படத்தை வரைந்து பாடம் கற்பித்தார். இந்நிலையில், அவர் வரைந்து பாடம் நடத்தும் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார், அந்த புகைப்படத்தை  கண்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். News published in Paris.com

ரூ.700 கோடி மோசடி சென்னையில் தொழில் அதிபர், சுபிக்ஷா சுப்பிரமணியன் கைது

படம்
சென்னை உள்பட தமிழகத்திலும், குஜராத், டெல்லி, மராட்டியம், ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ‘சுபிக்ஷா’ என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் 1997–ல் இருந்து மிகவும் பிரபலமாக செயல்பட்டு வந்தது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் மளிகைப் பொருட்கள், பழங்கள், மருந்துகள், செல்போன்கள் உள்ளிட்டவை விற்கப்பட்டு வந்தன. ‘சுபிக்ஷா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சுப்பிரமணியன் (வயது 50) ஆவார். இவரை ‘சுபிக்ஷா’ சுப்பிரமணியன் என்று தான் அழைப்பார்கள். ‘சுபிக்ஷா’ சூப்பர் மார்க்கெட்டை போல இவர் விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் விஸ்வபிரியா பைனான்ஸ் செக்யூரிட்டி என்ற பெயர்களில் நிதி நிறுவனங்களையும் நடத்தி வந்தார். இந்த நிதிநிறுவனத்தின் மூலம் பொதுமக்களிடம் முதலீட்டு தொகையைப் பெற்று ரூ.150 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக ‘சுபிக்ஷா’ சுப்பிரமணியன் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2015–ம் ஆண்டு வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். அந்த வழக்கில், 2015–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘சுபிக்ஷா’ சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார். ...

சிரியப் போர்

படம்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம், கடந்த சனிக்கிழமை சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளபோதிலும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீது சிரியா அரச படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள கிழக்கு கூட்டாவில் நடந்த தாக்குதல்களில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உலகின் மிக இருட்டான கட்டிடம்!

படம்
உலகின் மிக இருட்டான கட்டிடம் தென் கொரியாவில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சார்பில் லண்டன் கட்டிடக்கலை நிபுணர்களைக் கொண்டு இந்த வித்யாசமான கட்டிடத்தை வடிவமைத்துள்ளனர். தூய்மை மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை குறிக்கும் வகையில் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.   தனித்துவமான அம்சத்தை கொண்டுள்ள இந்த கட்டிடம் 99% சூரிய ஒளியை உறிஞ்சும் தன்மையை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் மில்லியன் கணக்கான கார்பன் நானோகுழாய்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் தலைமுடியை விட சுமார் 3,500 மடங்கு மெல்லியதாக உள்ள சிறிய நானோகுழாய்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கட்டிடத்தின் சிறப்பம்சமாகும். இந்த நானோகுழாய்கள் 14 மற்றும் 50 மைக்ரான் நீளத்தை கொண்டதாகும். அதாவது ஒரு மைக்ரான் 0.001 மில்லி மீட்டர் ஆகும். சூரிய ஒளி நானோகுழாய்களில் பிடிக்கப்பட்டு கட்டிடத்தில் இருந்து வெப்பமாக வெளியிடப்படுகிறது. VantaBlack VBx2 என்றழைக்கப்படும...

சொந்த மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய தந்தை: - விசாரணையை துவக்கிய நீதிமன்றம்

படம்
ஸ்பெயின் எல்லையில் நபர் ஒருவர் தமது 8 வயது மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய விவகாரத்தில் நீதிமன்றம் விசாரணையை துவக்கியுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு பெட்டிக்குள் வைத்து 8 வயது சிறுவன் கடத்தப்படுவதாக வெளியான புகைப்படம் உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.   இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிறுவனின் தந்தை வடக்கு மொராக்கோவில் அமைந்துள்ள ஸ்பெயினுக்கு சொந்தமான பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இந்த பகுதியில் இருந்தே பெரும்பாலான ஆப்பிரிக்க நாட்டு அகதிகள் ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சி மேள்கொள்கின்றனர்.2015 ஆம் ஆண்டு மே மாதம் மொராக்கோ நாட்டு பெண்மணி ஒருவர் கனமான பெட்டி ஒன்றை இழுத்துக் கொண்டு எல்லைப்பகுதி வழியாக செல்வதை ஸ்பெயின் பொலிசார் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் சந்தேகமடைந்த பொலிசார் எக்ஸ்ரே கருவிகள் மூலம் பெட்டியை சோதனையிட்டதில் சிறுவன் ஒருவன் பெட்டிக்குள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குறித்த சிறுவனை விடுவித்த பொலிசார், எல்லையில் சிறுவனுக்காக காத்திருந்த அவனது தந்தையை கைது செய்தனர். சிறுவனின் தந்தையான Ouattara(45), தம்மை ஆ...

தொடரும் மரணங்கள்: - சிரியாவில் போர்நிறுத்தத்தை கொண்டுவர தடுமாறும் ஐ.நா

படம்
கடந்த வியாழன் முதல் அடுத்தடுத்த வாக்கெடுப்புகள் தடைபெற்றுவரும் சூழலில், இன்று மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. உதவி மற்றும் மருத்துவப் பொருட்களை கொண்டு செல்வதற்காக 30 நாட்கள் போர்நிறு த்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அந்தத் தீர்மானத்தின் நகலில் கூறப்பட்டுள்ளது. அதில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று சிரியாவின் முக்கியக் கூட்டாளியான ரஷ்யா வலியுறுத்திவரும் நிலையில், போர்நிறுத்தம் அமலாவதை ரஷ்யா தமாதிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.   இந்த விவகாரத்தில் செயல்படுவதில் தோல்வி ஏற்பட்டால் அது ஐ.நா-வின் தோல்வி என்று பிரான்ஸ் கூறியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு கூட்டா பகுதியில், கடந்த ஞாயிறு முதல் நடக்கும் அரசின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்ந்துள்ளதாகவும், அவர்களில் குறைந்தது 99 பேர் குழந்தைகள் என்றும் சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் அமைப்பு கூறியுள்ளது. தீர்மானத்தின் அம்சங்கள் என்ன? குவைத் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ள அந்த தீர்மானத்தில், அ...

ஏலத்திற்கு வரும் ஸ்டீவ் ஜாப்ஸ் ரெஸ்யூம்

படம்
ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பணியில் சேர விண்ணப்பித்த முதல் விண்ணப்பப்படிவம் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பணியில் சேர்வதற்கு விண்ணப்பித்த முதல் ரெஸ்யூம் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் ரெஸ்யூம் 50,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.32,45,000 வரை ஏலத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் துவங்கப்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஸ்டீவ் ஜாப்ஸ் பூர்த்தி செய்த ஒற்றை பக்க விண்ணப்ப படிவத்தில் ஸ்டீவ் எழுத்து பிழைகளுடன் தானே பூர்த்தி செய்திருக்கிறார். இத்துடன் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் தன் ஆர்வத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்டீவ் பூர்த்தி செய்த விண்ணப்பம் எந்த பணியில் சேர்வதற்கானது மற்றும் அவருக்கு அந்த வேலை உண்மையில் வழங்கப்பட்டதா என்ற விவரங்கள் தெரியவில்லை, எனினும் அது பல லட்சங்களுக்கு ஏலத்தில் விற்பனையாக இருப்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. தொலைப்பேசி வைத்திருப்பது குறித்த கேள்விக்கு இல்லை என குறிப்பிட்டிருக்கிறார். எலெக்ட்ராணிக்ஸ் டெக் அல்லது டிசைன் இன்ஜினியர் மற்றும் ...

250 கிலோ எடையை குறைத்த உலகின் சாதனை மனிதர்!

படம்
250 கிலோ எடையை குறைத்த உலகின் சாதனை மனிதர்! உலகின் அதிக எடை கொண்டவர் என்பதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற மெக்சிகோ இளைஞர், தனது எடையில் 250 கிலோவை போராடி குறைத்துள்ளார். மெக்சிகோவில் உள்ள அகுவாஸ்கேலினேட் பகுதியை சேர்ந்தவர் ஜூவான் பெட்ரோ பிராங்கோ. வயது 33. கடந்த 2016-ம் ஆண்டு 595 கிலோ எடை இருந்த பிராங்கோ, உலகின் அதிக எடை  கொண்ட மனிதர் என்பதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். எப்போதும் படுக்கையிலேயே இருந்த பிராங்கோவுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நுரையீரல் பிரச்னை ஆகியவை அதிகமாக இருந்தது. உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால்தான் உயிர்வாழ முடியும் என டாக்டர்கள் கூறியதையடுத்து தந்த சொந்த மாநிலத்தில் இருந்து மேற்கு பகுதியில் உள்ள கவுடலராஜாவுக்கு குடிபெயர்ந்தனர். அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட அவருக்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. பின்னர், இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தொப்பையை குறைக்கவும் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. பின்னர் அவருக்காகவே பிரத்யேகமாக உடற்பயிற்சி கருவிகள் வடிவமைக்கப்பட்டன. அதை வைத்து தினமும் பயிற்சி மேற்...

மன அழுத்தம்: ரோஹிஞ்சா குழந்தைகள் வரைந்த ஓவியத்தில் என்னவெல்லாம் இருந்தன?

படம்
(Imagecaptionமொஹம்மதநூர்) ரோஹிஞ்சா குழந்தைகள் சிலர் ஒன்றாக இணைந்து மியான்மர் தேசிய கீதத்தை இசைக்கிறார்கள். மறுபுறம், ஒரு டஜன் பெண்கள் அருகே உள்ள அறையில் தையல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால், தினமும் அவர்களுக்கு ஊதியமாக 40 ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த வருவாயை கொண்டுதான் அவர்கள் ஜீவிக்க வேண்டும். இந்த இடம் வங்காளதேசத்தில் உள்ள உள்ள பலுகாலி அகதி முகாம். மியான்மரிலிருந்து வன்முறைக்கு பயந்து தங்கள் உயிரை காத்துக் கொள்ள இங்கே வந்தவர்கள் உள்ளார்கள். சொந்த நாட்டிலேயே அந்நியப்பட்டுப் போன இந்த குழந்தைகளில் பலர், தங்கள் கண் எதிரிலேயே தங்கள் உற்றார் உறவினர்கள் இறந்ததை பார்த்தனர். துயர்மிகு அந்த நாட்கள் கொடுத்த நினைவுகள் வலி மிகுந்தவை. என்றுமே மறக்க இயலாத ஆறாத காயத்தின் வலியை அவை கொடுக்கின்றன; கவலைக் கொள்ள வைக்கின்றன. அந்த முகாமில் ஏராளமான சிறுவர்கள் இருக்கிறார்கள். அந்தச் சிறுவர்களில் ஒருவர் மட்டும் மிகவும் அமைதியாக ஜன்னல் ஒன்றின் அருகே நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் பெயர் மொஹம்மத் நூர். அவர் வயது 12. அந்த சிறுவனின் தந்தை நீண்ட காலமாக நோய்வாய்பட்டிரு...

பாலியல் குற்றவாளிகளுக்கு என்ன தண்டணை தெரியுமா

படம்
சீனா : சீனாவில் பாலியல் வன்கொடுமை செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு நிச்சயம் மரண தண்டனை அறிவிக்கப்படுகிறது. சில நேரங்களில் பாலியல் குற்றவாளிக்கு அவரது பிறப்புறுப்பு சிதைக்கப்படுகிறது. இரான் : இரான் நாட்டில் பாலியல் குற்றவாளி நிரூபிக்கப்பட்டால் இங்கேயும் நிச்சயம் மரண தண்டனைதான். பெரும்பாலும் பொதுமக்கள் முன்னிலையில் தான் நிறைவேற்றப்படுகிறது, சில முறை மரண தண்டனையிலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகளுக்கு 100 கசையடிகள் வழங்கப்படுகிறது. இதுவும் பொதுமக்கள் முன்னிலையில் தான். நெதர்லாந்து : நெதார்லாந்தில் பாலியல் அத்துமீறலுக்கு கூட தண்டனைகள் கொடுக்கப்படுகிறது. ஒருவரின் அனுமதியின்றி முத்தம் கொடுத்தால் கூட அதனை குற்றமாக எடுத்துக் கொள்கிறார்கள். குற்றத்தைப் பொருத்தும், குற்றவாளியின் வயதைப் பொருத்தும் நான்கு முதல் பதினைந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. பிரான்ஸ் : பிரான்ஸ் நாட்டில் ஒருவர் பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தது பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும். பதினைந்து ஆண்டுகளும் அவருக்கு பல்வேறு விதமான டார்ச்சர்கள் வழங்கப்படுகிறது. சில நே...

இந்திய மதிப்பில் 14 கோடிக்கு தன் கற்பபையை விற்ற மாடலிங் அழகி...

படம்
அலெக்ஸாண்டிரா கெஃப்ரென  சேர்ந்த மாடல் அழகி. வெறும் 18 வயதே நிரம்பிய இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் முறையாக தனது கன்னித்தன்மையை 1.7 மில்லியன் யூரோக்களுக்கு ஏலத்தொகை வந்துள்ளதாக செய்திகள் வெளியிட்டு உலக பிரபலம் அடைந்தார். 14 கோடிக்கு ஏலம் ! இப்போது இவர் கடைசியாக தனது கற்பை ஒரு பெயர் வெளியிடப்படாத ஹாங்காங் தொழிலதிபர் ஒருவரிடம் விற்றுள்ளார். மேலும், அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் தான் கற்பை ஏலத்தில் வென்ற ஹாங்காங் தொழிலதிபர் மிகவும் நட்புடன் பழகக்கூடியவர். அவருடன் போனில் பேசியதை வைத்தே இதை தான் அறிந்ததாகவும் கூறியுள்ளார். தனது கற்பை விற்பது குறித்து சென்ற நவம்பர் மாதம் முதலே பேசி வந்தார் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென். யார் அதிக தொகை கோருவோருக்கு தனது கன்னித்தன்மையை ஏலத்தில் விட்டு தரவிருப்பதாகவும் கூறிவந்தார். தனது கற்பை ஏலம்விட்டு விற்ற செய்தி வெளியான பிறகு அலெக்ஸாண்டிரா கெஃப்ரெனை அவரது குடும்பம் ஒதுக்கிவிட்டது. ஹாங்காங் தொழிலதிபருடன் தான் தங்கவிருக்கும் ஹோட்டலையும் புக் செய்துவிட்டார் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென். இந்த செயலை இவர் சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ் உடன் இணைந்து செய்துள்ளார். அலெக்...

மடிக்கணினியை பாதுகாக்க சில டிப்ஸ் !!

படம்
மடிக்கணினியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், பாமர மக்கள் என அனைத்து தரப்பினருமே மடிகணினியைப் பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்கணினியை பாதுகாக்க சில வழிகள்... ✓ ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating System-த்தை புதுப்பிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்தமாட்டீர்கள் என்ற நிலையில் மடிக்கணினியில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள். ✓ மடிக்கணினித் திரையை சுத்தமாக வைத்திருக்க மெல்லிய 'சில்க்" துணிகளைப் பயன்படுத்தலாம். அல்லது அதற்கென இருக்கும் Screen Cleaning Liquid பயன்படுத்தி துடைக்கலாம். வேறு துணிகளையோ அல்லது வெறும் கைகளையோ பயன்படுத்தி மடிக்கணினியை துடைக்க கூடாது. ✓ மடிக்கணினிக்கு என கொடுத்த Charger பயன்படுத்த வேண்டும். வேறு Charger-ரை பயன்படுத்தினால் வெப்ப மாறுதல் மற்றும் அதிக மின்னோட்டம் காரணமாக உங்களுடைய மடிக்கணினி செயலிழந்து போகலாம். முடிந்த வரை வேலை செய்து கொண்டிருக...

இப்படியும் ஒரு நாடு..!!!!!

படம்
ப ட்ஜெட்டைவிட உபரி வருவாய் அதிகம் இருப்பதால் சிங்கப்பூர் அரசு, அந்நாட்டு குடிமகன்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர்கள் வரை போனஸாக வழங்க முடிவுசெய்துள்ளது. 21 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூர் குடிமகன்கள் இதைப் பெற்றுக்கொள்ளலாம். 2018-ம் ஆண்டுக்கான சிங்கப்பூர் பட்ஜெட் தாக்கலின்போது, நிதியமைச்சர் ஹெங் ஸ்வீட் ஹீட் இதை அறிவித்தார். அந்த நாட்டில் வசிக்கும் 27 லட்சம் பேர் இந்தப் பயனைப் பெற தகுதியுடையவர்களாகிறார்கள். ஆண்டுக்கு 28 ஆயிரம் டாலர்களுக்குக் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர்களும், ஒரு லட்சம் டாலர்கள் வரை சம்பாதிப்பவர்களுக்கு 200 டாலர்களும், அதற்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு 100 டாலர்களும் போனஸாகக் கிடைக்கும். 2018-ம் ஆண்டுக்குள் இந்த போனஸ் வழங்கப்பட்டுவிடும். இதற்கு 700 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் செலவாகும். இந்த ஆண்டு மட்டும், சிங்கப்பூர் பட்ஜெட்டில் 9.61 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் உபரி வருவாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 5 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் முதலீட்டில், சிங்கப்பூரில் புதிய ரயில் திட்டங்களுக்கும் 2 பில்லியன் டாலர்களைக்கொண்டு முதியவர்களைக்...

நாடாளுமன்றத்திற்குஒரு நிமிடம் தாமதமாக வந்தால் ராஜினாம கடிதம் கொடுத்த அமைச்சர்.

நாடாளுமன்றத்திற்குஒரு நிமிடம் தாமதமாக வந்தால் ராஜினாம கடிதம் கொடுத்த அமைச்சர்.அவர் ராஜினாமா செய்வதற்கு முன் நாடளுமன்றத்தில் ஆற்றிய உரை. ”தாமதமாக வந்ததால் ஒரு உறுப்பினரின் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாமல் போனதற்கு நான் வெட்கப்படுகின்றேன். நான் தாமதமாக வந்ததற்காக இந்த சபையில் பகிரங்கமாக நான் மன்னிப்பு கேட்கின்றேன். எப்பொழுதும் நான் மிகுந்த நன்னடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் நினைக்கிறேன் உடனடியாக நான் எனது பதவியை ராஜினமா செய்கின்றேன்” எனக் கூறிவிட்டு நாடளுமன்றத்திற்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்தால் மன்னிப்பு கேட்டு கொண்டு ராஜினாமா கடிதத்தையும் கொடுத்துள்ளார் பிரிட்டன் அமைச்சர் லார்ட் பேட்ஸ்! மற்ற உறுப்பினர்கள் அவரை போக வேண்டாம் எனக் கூறுகின்றனர். என்றாலும் அவர் சென்று விடுகின்றார். எனினும் பிரிட்டன் பிரதமர் அவரின் ராஜினமாவை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.! அவரின் உரை வீடியோவாக கீழே