இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாகிஸ்தானில் தலித் இந்து பெண்ணுக்கு எம்.பி.பதவி!

படம்
பாகிஸ்தானில் தலித் இந்து பெண் ஒருவர் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல்-சபைக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. சிந்து மாகாணத்தில் 12 இடங்களில் 10 இடங்களை முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி கைபற்றியுள்ளது. சிந்து மாகாணத்தில் இருந்து மேல்-சபைக்கு போட்டியிட்ட இந்து தலித் இனப்பெண் கிருஷ்ண குமாரி கோலி (வயது 39) வெற்றி பெற்றார்.   இதற்குமுன்பும் இதே கட்சி சார்பில்தான் ரத்னா பகவன்தாஸ் சாவ்லா என்ற பெண், நாடாளுமன்ற மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கிருஷ்ணகுமாரிகோலி, தார் பகுதியில் நங்கர்பார்க்கர் மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். ஒரு ஏழை விவசாய குடும்பத்தினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. News posted in inneram.com

மனிதன் உருவாது எப்படி?

படம்
உலகின் மிகப்­பெ­ரிய அதி­சயம் மனிதன் என்றால் மனி­தனை உரு­வாக்­கிய கரு­முட்­டையும் விந்­த­ணுவும் அதை­விட அதி­ச­ய­மா­னவை. அவை எவ்­வ­ளவு சிறி­யனவோ அவ்­வ­ளவு பெரிய இரக­சி­யத்தை உள்­ள­டக்கி வைத்­தி­ருக்­கின்­றன. கரு­விற்கு தேவை­யான மர­ப­ணுக்கள் தாயின் கரு­முட்­டை­யிலும் தந்­தையின் விந்­த­ணு­விலும் இருக்கும். விந்­தணு கரு­முட்­டையை அடை­வ­தற்குள் பெரிய போராட்­டமே நடந்­தி­ருக்கும்.  கருப்­பையின் நுழைவுச் சுவர்­களில் இருக்கும் நாடாக்கள் போன்ற அமைப்பில் சிக்கி பாதி விந்­த­ணுக்கள் காணாமல் போக, பிளவுபட்ட வால் மற்றும் வாலே இல்­லாத விந்­தணு என பாதி விந்­த­ணுக்கள் தகுதி நீக்கம் செய்­யப்­பட, நீந்தத் திற­னற்ற விந்­த­ணுக்கள் பாதி­யி­லேயே விருப்ப ஓய்வு எடுத்து கொள்ள, மிச்சம் இருக்கும் சொற்ப அளவு விந்­த­ணுக்கள் தான் கரு­முட்டை இருக்கும் இடத்தின் அரு­கி­லேயே செல்லும். முதலில் கரு­முட்­டையை அடையும் விந்­தணு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு ஓர் இரசா­யன சமிக்ஞை வெளி­யி­டப்­படும். இதனால் கரு­முட்­டைக்குள் செல்ல முயற்சி செய்யும் மற்ற விந்­த­ணுக்­க­ளுக்கு மின் அதிர்வு போன்ற ஒரு விளைவு ஏற்­படும். ஆகையால் ஒன்­றுக...

காதல் நோயின் அறிகுறிகள்

படம்
காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். வியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய், ஞாபகம் வருகிறதா? ). எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த அறிகுறிகள் என்ன ? வியர்க்கும் கைகள், பசியின்மை ( "பாலுங்கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடி" ), முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது, இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை . காதலுக்கு பல கட்டங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டமும் ஒருவிதமான ரசாயனப் பொருட்களால் தூண்டப்படும் உடல் ரீதியான மாற்றங்களால் ஆட்டுவிக்கப்படுகின்றது. முதலில் காமம் தோன்றும் ஒரு கட்டம் - இது அடிப்படையான பாலியல் ரீதியான ஒரு வேகம். இது ஈர்ப்பு நிலைக்கு இட்டுச் சென்று பின்னர் உணர்வு ரீதியாக ஒன்று சேரும் நிலைக்கும் பின்னர் அதுவே நீண்ட கால உறவுக...

உலகின் எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாத அணுஆயுத ஏவுகணை: - அறிமுகம் செய்த புதின்

படம்
உலகின் எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாத அணுஆயுத ஏவுகணையை தங்களது ராணுவத்தில் சேர்த்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையின் நாடாளுமன்றத்தில் இரு சபையின் உறுப்பினர்கள் மத்தியில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கில் புதின் உரையாற்றினார். அப்போது தனது ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார முன்னேற்றங்களை பட்டியலிட்டு பேசினார். கடந்த 2017-ம் ஆண்டு ரஷ்யா ராணுவத்தில் 300 புதிய வகை ஆயுதங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ரஷ்யாவின் ராணுவ பலத்தை அதிகரிப்பது, எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்கு அல்ல என்று அவர் குறிப்பிட்டார். பின்னர் புதிய ஏவுகணை அமைப்புகளை பிரம்மாண்ட திரைகளில் திரையிட்டு அவற்றின் செயல்பாடுகளை விளக்கினார். வழக்கமாக ஏவுகணைகள் ஏவுமிடத்திலிருந்து புறப்பட்டு பாய்ந்து செல்லும்போது அவற்றின் பாதையை கணித்து தடுக்கலாம், ஆனால் இந்த ஏவுகணைகள் எதிர்பாராத திருப்பங்களுடன் தடைகளை தாண்டி சென்று தாக்கும் வல்லமை படைத்தவையாகும். இந்த ஏவுகணைகளால் ரஷ்ய எல்லைகளில் நேட்டோ கூட்டுப்படைகள் ஏற்படுத்தியுள்ள தடுப்பு ஏற்பாடுகள்...

பொண்டாட்டியிடம் திட்டு வாங்கமல் இருக்க அமெரிக்கர் செய்யும் காரியத்தைப் பாருங்கள்

படம்
அமெரிக்காவில் மனைவியிடம் திட்டு வாங்குவதை விட, சிறை தண்டனையே மேலானது என்று எண்ணி ஒரு கணவர் அடிக்கடி சிறை சென்று வருகிறார். கன்சாஸ் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் ஜான் (71). இவர் மனைவியிடம் திட்டுவாங்குவதை விட, சிறை தண்டனையே மேலானது என்று எண்ணி அடிக்கடி சிறைவாசம் அனுபவித்து வருகிறார். வங்கி கொள்ளை முயற்சியில் பொய்யாக ஈடுபட்டு 6 மாத சிறை தண்டனை அனுபவித்தவர், சமீபத்தில் தான் விடுதலையானார்.  ஆனால் அடுத்த சில நாட்களிலேயே மற்றொரு வழக்கில் தன்னை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார். இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், லாரன்ஸ் நல்ல மனிதர். குற்றங்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. மனைவியிடம் சண்டையிடுவதை தவிர்க்கவும், பழி பேச்சுகளை தவிர்க்கவுமே சிறைத்தண்டனைக்கு உள்ளாகிறார். தொடர்ந்து தவறு செய்யாமல் பொய் சொல்லி சிறை தண்டனை அனுபவிக்கும் ஜானுடன், அவர் மனைவியை சமாதானப்படுத்தும் முயற்சியாக பொலிசார் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்கள் Posted in seithy.com

கென்யாவில் 39 பெண்களை மணந்து 103 குழந்தைகளுக்கு தந்தையான நபர்!

படம்
கென்யாவில் வாழும் நபர் ஒருவர் 39 பெண்களை திருமணம் செய்து கொண்டு 103 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்டோலியா கிராமத்தை சேர்ந்தவர் நபி யோகனா (68), தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என நபி கூறி கொள்கிறார். இவர் இதுவரை 39 பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் 103 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளார். இதோடு யோகனாவுக்கு 232 பேர குழந்தைகளும் உள்ளனர், இவரின் மூன்று மனைவிகள் உயிரிழந்து விட்டனர். சிறுவயதிலிருந்து மாமிசம் சாப்பிடாத இவர் ஒருமுறை கூட முகத்தை ஷேவ் செய்து கொண்டதில்லை. யோகனா கூறுகையில், நான் என் வருங்கால மனைவிகளை தேடி செல்வதில்லை, கடவுள் தான் என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார். கடவுளின் சொல்படி நான் 48 பெண்களை மொத்தம் திருமணம் செய்து கொள்ளவேண்டும், அதை செய்வேன் என கூறியுள்ளார். தான் 280 ஆண்டுகள் வாழ்வேன் என கூறும் யோகனா அதன் பின்னர் இறந்து மீண்டும் மறுபிறவி எடுத்து அடுத்த 2700 ஆண்டுகளுக்கு வாழ்வேன் என கூறுகிறார்! Posted in seithy.com

இறந்த மம்மியை மம்மியாக்கி வாழ்ந்து வந்த பாட்டி

படம்
உக்ரைனில் மூதாட்டி ஒருவர் இறந்த தன் தாயுடன் 30 ஆண்டுகள் வாழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உக்ரைனின் மைகோலைவ் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிசார் புகார் அளித்துள்ளனர்.அதன் பின் பொலிசார் அந்த மூதாட்டி இருக்கும் வீட்டை சோதனை செய்து பார்த்த போது, அவரின் தாயார் உடல் சோபாவில் கிடத்தப்பட்டிருந்தது. வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்டு, தலை மூடப்பட்டிருந்தது. நீல நிற ஷூ, பச்சை நிற சாக்ஸ் அணிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து பொலிசார் மூதாட்டிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி அருகில் இருப்பவர்களிடம் இவர் குறித்து விசாரித்த போது யாரிடமும் அவர் பேசுவதில்லை என்று கூறியுள்ளனர். Posted in seithy.com

பெரியார் பேச்சு

படம்
நம் நாட்டில் திராவிட மக்களுக்குள்ளாகவே திராவிடர், ஆதிதிராவிடர் என்கிற ஒரு பிரிவு இருக்கிறது என்பதோடு ஆதிதிராவிட சமூகம் மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட சமூகமாக இருந்து வருகிறது. திராவிடநாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்கு திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்களோ அப்படி திராவிடர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கு அதை விட மேம்பட்ட தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த நிலைமை திராவிட சமுதாயத்துக்கே மானக் கேடான நிலைமையாகும் என்பதோடு. திராவிடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்களென்று வகுத்திருப்பதையும் அரண் செய்கிறது. ஆகையால், ஆதிதிராவிடர் என்கின்ற பெயரே மாற்றப்பட்டு இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்கின்ற பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என்பது எனது ஆசை. இந்த இரு நோக்கங்களும் ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கங்களில் பட்டத்தென்பது எனது அபிப்பிராயமாதலால் கட்சியின் பேரால் இவைகளைச் சொல்லுகிறேன். உத்தியோகம், கல்வி முதலிய விஷயங்களில் ஆதிதிராவிடர்களுக்குத் தனி சலுகைக்காட்டி சீக்கிரத்தில் நம்மோடு சரி சமத்துவம் அடையும் படியான நிலைமை ஏற்படுத்த வேண்டியது நம் கட்சியின் தனிப்பட்ட கடமைகளில் ஒன்று...

நூறு ஆண்டுகளாக.தீர்க்கப்படாத கொலை வழக்கு

படம்
பிரான்சில் இடம்பெற்ற ஒரு தொழிலதிபரின் கொலை வழக்கு நூற்றாண்டு கால மர்மமாக நீடிக்கிறது. சம்பவம் இடம்பெற்ற நாளில் இருந்து இதுவரை காலமும் விசாரணைகள், தேடுதல்கள் என எல்லாமும் செய்தாயிற்று.. மர்மம் மட்டும் புலப்படவே இல்லை. Guillaume Seznec மற்றும் Pierre Quemeneur  இருவரும் நண்பர்கள்.. தவிர இருவரும் வியாபார பங்குதாரர்கள். மே மாதம், 1923 ஆம் வருடம். இருவரும் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவருடன் மகிழுந்து ஒன்றில் ரென் (Rennes) நகரின் மேற்கு பகுதியில் இருந்து பரிசை நோக்கி சென்றனர். அமெரிக்க இராணுவத்தினர் பயன்படுத்திய மகிழுந்து ஒன்றை வாங்கும் நோக்கில் இவர்கள் பயணமாகியிருந்தனர். மூன்றாம் நாள், Seznec மாத்திரம் வீடு திரும்பினார். வரும் வழியில் மகிழுந்து பழுதடைந்ததாகவும், Quemeneur தொடரூந்தில் வருவதாகவும் குறிப்பிட்டார். இதற்கிடையில் Quemeneur,  Le Havre நகரில் இருந்து 'நான் இரண்டொரு நாட்களில் வீடு திரும்புவேன்!' என தந்தி அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் ஒருபோதும் வீடு திரும்பவில்லை. Seznec காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட...

பெரியார் பேச்சு

படம்
நம் நாட்டில் திராவிட மக்களுக்குள்ளாகவே திராவிடர், ஆதிதிராவிடர் என்கிற ஒரு பிரிவு இருக்கிறது என்பதோடு ஆதிதிராவிட சமூகம் மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட சமூகமாக இருந்து வருகிறது. திராவிடநாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்கு திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்களோ அப்படி திராவிடர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கு அதை விட மேம்பட்ட தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த நிலைமை திராவிட சமுதாயத்துக்கே மானக் கேடான நிலைமையாகும் என்பதோடு. திராவிடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்களென்று வகுத்திருப்பதையும் அரண் செய்கிறது. ஆகையால், ஆதிதிராவிடர் என்கின்ற பெயரே மாற்றப்பட்டு இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்கின்ற பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என்பது எனது ஆசை. இந்த இரு நோக்கங்களும் ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கங்களில் பட்டத்தென்பது எனது அபிப்பிராயமாதலால் கட்சியின் பேரால் இவைகளைச் சொல்லுகிறேன். உத்தியோகம், கல்வி முதலிய விஷயங்களில் ஆதிதிராவிடர்களுக்குத் தனி சலுகைக்காட்டி சீக்கிரத்தில் நம்மோடு சரி சமத்துவம் அடையும் படியான நிலைமை ஏற்படுத்த வேண்டியது நம் கட்சியின் தனிப்பட்ட கடமைகளில்...

உலகின் மிகப்பெரும் பயங்கரவாத மத அடிப்படைவாத இயக்கம் ராஷ்தியா சுயம் சேவக் சங் (RSS)

படம்
உலகின் மிகப்பெரும் மத அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்களாக அல் கயிதா போன்ற ஜிகாத் அமைப்புக்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட்டாலும்,  உலகின் மிகப்பெரும் பயங்கரவாத மத அடிப்படைவாத இயக்கம் ராஷ்தியா சுயம் சேவக் சங் (RSS) என்ற அமைப்பே. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கைலும் ஐரோப்பிய நாடுகளிலும் கிளைகளைக் கொண்டிருக்கும் ஆ.எஸ்.எஸ் இந்தியாவில் நான்குமுறை தடைசெய்யப்பட்டது. ஐரோப்பிய பாசிச அமைப்புக்களால் கவரப்பட்டு 1925 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஹிட்லர். முசோலீனி போன்ற மனிதக் கொலையாளிகளை பின்பற்றுவதாக தனது அரசியல் திட்ட முன்மொழிவிலேயே கூறும் ஆர்.எஸ்.எஸ் இந்திய மக்களை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரதும் எதிரி. இந்தியா முழுவதும் தனது பயங்கரவாதப் பயிற்சி முகம்களை நடத்திவந்த ஆர்.எஸ்.எஸ் இன் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரே இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ஆளும் பாரதீய ஜனதா கட்சியைத் தனது முன் முகமாகப் பயன்படுத்திவந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, 1985 ஆம் ஆண்டு தனது ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான நன்கு பயிற்றப்பட்ட நரேந்திர மோடியை பாரதீய ஜனதாவிற்கு அனுப்பிவைத்தது. பார்பனீய இந்துத்துவ பயங்...

செயற்கைக்கோளை விண்ணிற்கு செலுத்த உதவும் உலகின் மிகப்பெரிய விமானம்

படம்
அமெரிக்காவில் உள்ள தனியார் விமான நிறுவனம் செயற்கைக்கோள்களை விண்ணிற்கு செலுத்தும் வகையில் உலகின் மிகப்பெரிய விமானத்தை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் உலகின் மிகப்பெரிய விமானத்தை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளது. இந்த விமானம் செயற்கைக்கோள்களை விண்ணிற்கு செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இரட்டை உடற்பகுதி கொண்ட இந்த விமானத்தின் இறக்கைகள் கால்பந்து மைதானம் அளவிற்கு மிக நீளமாக உள்ளது. ஸ்ட்ரடோலாஞ்ச் எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 250 டன் எடை மற்றும் 117 மீட்டம் நீளம் கொண்டது. 6 மிகப்பெரிய என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 6 எரிபொருள் தொட்டி உள்ளது. அவை அனைத்தும் தனித்தனியாக நிரப்பட்டு சரியாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானத்தை குறைந்த வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. முழு சோதனை முடிவடைந்த பின் வருகின்ற ஜூன் மாதம் தொடக்கத்தில் ஸ்ட்ரடோலாஞ்ச் விமானம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமானத்தின் ஜன்னல் வழியாக குதித்த இளைஞர்.

படம்
விமானத்தின் அவசர கால ஜன்னல் வழியாக இளைஞர் குதித்தார். தவறான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து அவர் குதித்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள நெவார்க் விமான நிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் ட்ராய் பட்டூன் என்பவர் ஏறியுள்ளார். விமானத்தின் உள்ளே சென்ற பிறகு தான் அவருக்கு இது தான் செல்ல வேண்டிய விமானம் இல்லை என்று தெரிய வந்தது. உடனே தன்னை இறக்கிவிடும்படியும் விமான சிப்பந்திகளிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த விமானத்தில் இருந்த அதிகாரிகள் அவரை அமைதியாக உட்காரும்படி கூறியுள்ளனர். இதையடுத்து அந்த நபர் விமானத்தில் இருந்த அவசர கால ஜன்னலை திறந்து விமான இறக்கை மீது குதித்துள்ளார். இறக்கை மீது ஊற்றப்பட்டிருந்த சூடு நீரால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் காலதாமதமாக புறப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் விமான பயணிச்சீட்டின்படி அவர் சரியான விமானத்தில்தான் ஏறியுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் Posted in makkal kural.com

உலகளவில் போர் நடைபெறும் பகுதிகளில் வாழும் 35 கோடி குழந்தைகள்: - அதிர்ச்சி தகவல்

படம்
உலகளவிபோர் நடைபெறும் பகுதிகளில் ஆறுக்கு ஒரு குழந்தை வாழ்ந்து வருவதாக தனியார் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிய வந்துள்ளது. போர் சூழலில் வாழுகி einன்ற குழந்தைகள், இதற்கு முன்னர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக ஆபத்தில் வாழ்ந்து வருவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சேவ் த சில்ரன் என்ற குழந்தைகள் நல அமைப்பு நடத்தியுள்ள புதிய ஆய்வில் 35 கோடியே 70 லட்சம் குழந்தைகள் போர் மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டு 20 கோடி குழந்தைகளே போர் பகுதிகளில் வாழ்ந்து வந்ததாக குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள நிலையில், தற்போது 75 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை இந்த தரவுகள் காட்டுகின்றன. இதில் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா நாடுகள் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளாக பதிவாகியுள்ளன. பொதுவாக, மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள குழந்தைகள் பெரும்பாலும் போர் நடைபெறும் இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழும் குழந்தைகளில் 5-ல் இரண்டு பேர் போர் நடைபெறும் இடத்திலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவில் அல்லது மரண தாக்குதல் நடைபெறும் ...

வியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரினங்கள் வாழ முடியும்: - ஆய்வில் புதிய தகவல்

படம்
வியாழன் கிரகத்தின் துணை கிரகம் யூரோப்பா. இது முழுவதும் ஐஸ்கட்டியால் ஆனது. இங்கு உயிரினங்கள் வாழ முடியும் என்ற விவரம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். யூரோப்பா துணை கண்டம் பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்கள் பூமியுடன் ஒத்துப்போவதை கண்டறிந்தனர். தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் அருகே போங்யங் தங்க சுரங்கத்தின் 2.8 கி.மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய ஒளிபடாத அங்கு தண்ணீரில் பாக்டீரியாக்கள் உயிர் வாழ்வதும் கத்ரியக்கங்கள் ஏற்படுவதும் தெரியவந்தது. அதே போன்ற நிலை யூரோப்பா துணை கிரகத்தின் நிலப்பரப்பிலும் உள்ளது. அங்குள்ள நிலமேற்பரப்பில் ஐஸ்படுகையின் 10 கி.மீட்டர் ஆழத்தில் கடல் போன்ற தண்ணீர் மறைந்துள்ளது. அதில் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கலாம் என கருதப்படுகிறது Posted in seithy.com

சவுதி அரேபியாவில் ராணுவத்தில் பெண்களை சேர்க்க சவுதி அரசு முடிவு!

படம்
சவுதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒருபகுதியாக ராணுவத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராணுவத்தில் பெண்கள் பணிபுரிவது கட்டாயமக்கப்படவில்லை என்றும் விருப்பமுள்ளவர்கள் மட்டுமே ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் எனவும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. சவுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் சவுதி அரேபியா மன்னர் சல்மான் ஆணை பிறப்பித்தார். 2018 ஜூன் மாதத்துக்குள் இது அமல்படுத்தப்படும் என்றும் அறி்விக்கப்பட்டது. அண்மையில் பெண்கள் கால்பந்து போட்டிகளை பார்க்க விளையாட்டு அரங்குகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்குவதாகவும் சவுதி அரேபிய அரசு அறிவித்தது. இது ஒரு முக்கியமான அறிவிப்பு என்று கூறிய சவுதி கலாச்சார அமைச்சர் அவாத் அலாவத், 'திரையரங்குகளைத் திறப்பது பொருளாதார வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் வழிவகுக்கும் என்றும் விரிவான கலாச்சார துறையை...

இக்கட்டான நிலையில் 8 மாணவிகள்: கைகொடுத்து உதவிய இன்ஸ்பெக்டர்.

படம்
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் இக்கட்டான நிலையில் இருந்த 8 மாணவிகளுக்கு சரியான நேரத்தில் உதவிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது தெலுங்கானா மாநிலத்தில் நேற்று பொதுத்தேர்வு தொடங்கியதை அடுத்து இந்த தேர்வை எழுத ஐதராபாத்தை சேர்ந்த எட்டு மாணவிகள் பேருந்து ஒன்றில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். தேர்வு ஆரம்பிக்க ஒருசில நிமிடங்களே இருந்ததால் மாணவிகள் பதட்டத்தில் இருந்த நிலையில் திடீரென பேருந்து பிரேக் டவுன் ஆகி நடுவழியில் நின்று விட்டது. தேர்வு எழுதும் பள்ளி இரண்டு கிலோமீட்டரே என்றாலும் அங்கிருந்து எப்படி செல்வது என்று அந்த மாணவிகள் தவித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அந்த வழியாக ரோந்து வந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசலு, எட்டு மாணவிகளின் நிலைமையை உணர்ந்து தானே அவர்களை பள்ளிக்கு தனது காரில் அழைத்து செல்ல முடிவு செய்தார். இதனையடுத்து அந்த எட்டு மாணவிகளும் போலீஸ் பேட்ரோல் வாகனத்தில் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு சென்று தேர்வை எழுதினர். சரியான சமயத்தில் உதவி செய்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசலு அவர்களுக்கு சமூக இணையதளத்தில் பாராட்டுக்கள் கு...